வீதி அமைக்கும் பணிகளை பார்வையிட்டார் திலகநாதன் M.P
வீதி அமைக்கும் பணிகளை பார்வையிட்டார் திலகநாதன் M.P
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் நெட்டாங்கண்டல் வீதி அமைக்கும் பணிகளை இன்று (13) தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் நேரடியாக பார்வையிட்டார்.
3.5KM வீதி அமைக்கப்பட்டுவருவதுடன் குறித்த வீதிக்காக 145 மில்லியல் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அபிவிருத்தி பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வீதி அபிவிருத்தி பணியானது கடந்த 2026.01.01 அன்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த களவிஜயத்தில் தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











Comments
Post a Comment