2026 ஆம் ஆண்டுக்கான கரைதுறைபற்று பிரதேச முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
2026 ஆம் ஆண்டுக்கான கரைதுறைபற்று பிரதேச முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (15) கரைதுறைபற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கரைதுறைபற்று பதில் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர் செ.திலகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம், காணி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. முக்கியமாக பிரதேசத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள், புதிய திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவது தொடர்பாகவும், கிராம மட்டத்தில் நிலவும் தேவைகள் மற்றும் உட்பட பல பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது, மக்கள் சேவைகளை மேல...