Posts

Showing posts from January, 2026

கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் - வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு..

Image
நாளை (2)  இடம்பெறவுள்ள கிவுல் ஓயா தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், ஒன்றிணைந்த செயற்பாட்டாளர்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார். நாளை 02.02.2026 ஆம் திகதி காலை 10 மணிக்கு நெடுங்கேணி பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகும் இப் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து வருகைதந்து எமது தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்புக்கும் திட்டமிட்ட இனப் பரப்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுக்குமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான வீழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில்.

Image
கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான வீழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில்.  கிவுல் ஓயா நீர்த்தேக்க மேப்பாட்டுத்திட்டம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்குகானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில்  இன்று (01) கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வுபெற்ற முன்னால் காணி ஆணையாளர் கதிராமத்தம்பி குருநாதன் வழவாளராக கலந்துகொண்டதுடன், இதில் வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு,  கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு  பிரதேச சபை உறுப்பினர்கள்  கிவுல் ஓயா திட்டத்தில் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Image
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடி...

காத்தான்குடியில் யுவதி ஒருவரை பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஒருவரை 3ம் திகதி வரை விளக்கமறியல்.

Image
காத்தான்குடியில் யுவதி ஒருவரை பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஒருவரை  3ம் திகதி வரை விளக்கமறியல். காத்தான்குடி பொலிஸ் பிரிவில்  உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (30) உத்தரவிட்டார். இதுபற்றி தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்தவரான  சட்டத்தரணியாக செயல்பட்டு வரும் சட்டத்தரணி ஒருவர் தனது பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில்  அந்த பகுதியைச் சேர்ந்த 4 பெண் பிள்ளைகளை கொண்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரியான 24 வயதுடைய யுவதி ஒருவரை  2023 தொடக்கம்  வேலைக்கு அமர்த்தியுள்ளார் இவ்வாறு வேலைக்கு அமர்த்திய யுவதி காலையில் இருந்து இரவு 8.30 மணிவரையும் கடந்த 2025 வரை இரண்டு வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளது...

நாட்டில் திரவ பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மில்கோவால் நிறுவப்பட்ட புதிய குளிர்பதன சேமிப்பு நிலையத்தின் திறப்பு விழா முல்லைத்தீவு வெலிஓயாவில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

Image
நாட்டில் திரவ பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மில்கோவால் நிறுவப்பட்ட புதிய குளிர்பதன சேமிப்பு நிலையத்தின் திறப்பு விழா முல்லைத்தீவு வெலிஓயாவில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ரூபா 6 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இது மில்கோவின் 97 வது குளிர்பதன சேமிப்பு நிலையமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த குளிர்பதன சேமிப்பு நிலையம் பால் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 5,000 லிட்டர் பாலை சேமிக்கும் திறன் கொண்டது. இந்த திட்டத்திற்கு இணையாக, மில்கோ நிறுவனத்திற்கு திரவ பால் வழங்கிய 16 விவசாயிகளுக்கு ரூ. 1.2 மில்லியன் மதிப்புள்ள ஊக்கத்தொகை காசோலைகளை துணை அமைச்சர் வழங்கினார் மற்றும் துணை அமைச்சரின் தலைமையில் பால் கொள்கலன்களை விநியோகித்தார். மில்கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் புஷ்பகுமார கமகே, வடக்கு மாகாண மேலாளர் சம்பத் ஜெயசேகர, மில்கோ நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பால் விவசாயிகள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஹபராதுவ, கொக்கல கதலுவப் பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற ஒரு குழுவைச் சேர்ந்த மூன்று பேரில் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image
ஹபராதுவ, கொக்கல கதலுவப் பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற ஒரு குழுவைச் சேர்ந்த மூன்று பேரில் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கியவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.  ஒருவர் காணாமல் போய் உள்ளார். காணாமல் போனவர் கரடுவ, கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த சுமார் 40 பேர் கொக்கலாவின் கடலுவ பகுதிக்கு சுற்றுலாவிற்கு வந்ததாகவும், கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காணாமல் போன நபரைத் தேடுவதற்காக உனவடுன பொலிஸ் உயிர்காப்புப் படையினர் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். அதே நேரத்தில் ஹபராதுவ  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் நிதி மற்றும் நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் சமுர்த்தி வங்கிகளை வலுவான, பொறுப்புணர்வு கொண்ட மற்றும் மக்கள்மைய நிதி நிறுவனங்களாக மாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

Image
முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் நிதி மற்றும் நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம்  சமுர்த்தி வங்கிகளை வலுவான, பொறுப்புணர்வு கொண்ட மற்றும் மக்கள்மைய நிதி நிறுவனங்களாக மாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல்! முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் நிதி மற்றும் நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம்  சமுர்த்தி வங்கிகளை வலுவான, பொறுப்புணர்வு கொண்ட மற்றும் மக்கள்மைய நிதி நிறுவனங்களாக மாற்றுவது தொடர்பாக, சமுர்த்தி முகாமையாளர்களுடனான விசேட  கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (30) முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன்  அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக  பேரவை மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்டத்தின் அனைத்து சமுர்த்தி வங்கிகளின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துதல், சேமிப்பை ஊக்கப்படுத்துதல் கடன் வழங்கல், கடன் மீட்பு செயல்திறனை மேம்படுத்துதல், வைப்பு–கடன் விகிதத்தை உயர்த்துதல், செயலற்ற குழுக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளை (CBOs) மீளச் செயல்படுத்துதல், மற்றும் சமுர்த்தி பயனாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டை உறுதிப்படுத்துதல் ஆகிய முக...

தரம் ஆறு கல்வி மறுசீரமைப்பு குழுவுக்கு யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்!

Image
தரம் ஆறு கல்வி மறுசீரமைப்பு குழுவுக்கு யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்! தற்போது தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, சர்சைக்குள்ளாகிய நிலையில் பிற்போடப்பட்டுள்ள பாடத்திட்ட - கல்வி மறுசீரமைப்பு குறித்த, சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து, அதனைச் செயற்படுத்துவதற்குப் பொருத்தமான திட்டவரைபை முன்மொழிவதற்காக நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வழங்கிய வழிகாட்டல்களின் அடிப்படையில், பாடத்திட்ட - கல்விச் சீர்திருத்தப் பணிகளை முன்னெடுக்கவென விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமரின் ஆலோசனையின் படி, தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி விவகாரங்கள் சபைத் தலைவர் பேராசிரியர் பிரியங்கனி சேனநாயக்க தலைமையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி விவகாரங்கள் சபையின் முன்னாள் தலைவர் கலாநிதி உபாலி மாம்பிட்டிய, முன்னாள் உறுப்பினரும்...

துணுக்காய்- தென்னியன்குளத்தில் பிரமாண்ட பொங்கல் விழா - 2026

Image
துணுக்காய்- தென்னியன்குளத்தில் பிரமாண்ட பொங்கல் விழா - 2026 விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டமும் துணுக்காய் பிரதேச செயலகமும் இளம்புயல் விழையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா 29.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளம் பொது  விழையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது. விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரும் ஊடகவியலாளருமாகிய ச.தவசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ்.ரமேஸ் அவர்கள்  பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பமாகிய குறித்த  நிகழ்வில் சிறுவர்கள், இளையவர்கள் மற்றும் முதியவர்களுக்கான கிறிஸ் மரம் ஏறுதல், கிளித்தட்டு , கயிறிழுத்தல், தலையணை சண்டை , பலூன் ஊதி உடைத்தல் , முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், கிடுகு பின்னுதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகள் பல  நடைபெற்று பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதனை விட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவுசெய்...

மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் விபத்து.

Image
எகொடஉயன, மோதர சுற்றுவட்டத்திற்கு அருகில் பாணந்துறை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வலதுபுறம் திரும்பவிருந்தபோது, ​​பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.  விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். எகொட உயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹொரணை, புலத்சிங்கள வீதியின் தியபரெல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image
ஹொரணை, புலத்சிங்கள வீதியின் தியபரெல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொரணை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று, வீதியில்  கவிழ்ந்து, எதிர் திசையில் வந்த வேன் மீது மோதியது. விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 18 வயதுடைய சௌம் யாகமா, மகாகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், புலத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Image
மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, வோட்வாடி வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய வடிவேல் வினோதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் களுவன்கேணி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தின்போது தோணியிலிருந்த இளம் மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போனார்.  அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை களுவன்கேணி கடற்கரையோரத்தில் அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.