Posts

Showing posts from February, 2026

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்.

Image
சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் இன்று (13) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில்,  சட்டவிரோத  தொழில் அதிகரிப்பு சிறுதொழில் மீனவர்கள் வாழ்வு பாதிப்பு, சட்டவிரோத தொழிலை தடைசெய், சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அனுர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே என பல கோசங்களுடன்  நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு வருகைதந்து போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர். தொடர்ந்து போராட்டம் நடாத்தியவர்களுக்கும் ஊடகங்களுக்கும் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 20 வீதமானவர்கள் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளதாகவும், சுமார் 71 km க்கும் அதிகமாக கடல் உள்ளதாகவும் தெரிவித்தார்.  தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மீன் வளம் சட்டவிரோத முறையில் அழிக்கப்படுவதாகவும், தற்போதய அரசாங்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களிற்கான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை.

Image
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களிற்கான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் பரீட்சை முடியும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் அனைத்து வகையான விளம்பர நடவடிக்கைகளும் இதில் உள்ளடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முல்லைத்தீவு மீனவர் சங்கங்கள்.

Image
சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முல்லைத்தீவு மீனவர் சங்கங்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆதிவைரவர், சித்திவினாயகர், ஸ்ரீமுருகன், அன்னைவேணாங்கன்னி, சென்யூட், முள்ளிவாய்கால் கிழக்கு ஆகிய மீனவர் சங்கங்கள் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக இன்று (9) கருத்து தெரிவித்தனர். அவர்கள் தெரிவிக்கையில் மீன்பிடியில் தடைசெய்யப்பட்ட விடயங்கள் தடைசெய்யப்பட்டதாகவே காணப்பட வேண்டும் எனவும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு இலங்கை அரசாங்ம் அனுமதி வழங்கக்கூடாது எனவும், ரக்டர் பாவனை ஊடாக மீன் பிடிப்பதால் பவளப்பாறைகள் அழிவடைவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து சனாதிபதி செயலகம் முன்பாக முல்லைத்தீவு என குறிப்பிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட கரவலை சம்மாட்டிகள் எவரும் அங்கு இல்லை எனவும் தமக்கு அரசாங்கத்திலும் கடல்தொழில் அமைச்சரிலும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் சுருக்குவலை, லைட் பாச்சுதல் மற்றும் டைனமேட் அடித்து மீன்பிடித்தல் மிகவும் தவறான தொழில் எனவும் சிலர் அவ்வாறு செய்வதால் தமது சிறுதொழில் வாழ்வாதாம் பாதிப்படைவத...

உறுதிப்படுத்திய முத்திரைகள் இல்லாது காணப்படும் வவுனியா மாநகரசபை பற்றுச்சீட்டுகள்.

Image
  வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடத்தில் வவுனியா மாநகரசபை பெயர் பொறிக்கப்பட்ட ரூபா 50 பெறுமதியான பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றபோதிலும் அவற்றில் மானகரசபையின் சின்னம் அல்லது உத்தீயோகபூர்வ முத்திரை காணப்படாமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வவுனியா மாநகர சபைக்கு சொந்தமான குறித்த மலசலகூடத்தை குத்தகை அடிப்படையில் ஒருவர் நடாத்திவருவதுடன் குறித்த மலசலகூடத்திற்கு ரூபா 50 கட்டனம் அறவிடுவதுடன் மாநகரசபையின் உத்தியோக பூர்வ முத்திரை பதிக்கப்படாது பற்றுச்சீட்வுகள் வழங்கப்பட்டு பணம் அறவிருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த மலசலகூடம் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவதுடன் மாநகரசபையின் முத்திரையற்ற கட்டன பற்றுச்சீட்டு வழங்குபவரை வினவியபோது தம்மால் வவுனியா மாநகர சபைக்கு பற்றுச்சீட்டுகளை வழங்கி அவற்றிற்கு முத்திரை பதிக்குமாறு அனுப்பிவைத்ததாகவும் இதுவரை முத்திரை பதிக்கப்பட்ட பற்றுச்சீட்டு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மாநகரசபை உரிய தீர்வினை வழங்குவது கட்டாயமான ஒன்றாகும்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான கினிகத்தேன பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

Image
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான கினிகத்தேன பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் சமய தலைவர்களின் அனுஸ்டானங்களை தொடர்ந்து இன்று (06) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த இடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் போர்டுலேண்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்ததாரரான சீன நிறுவனத்தின் பொறியாளர்களால் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட பொல்பிட்டிய சந்தியில் உள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் நிலங்களை பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு, கட்டிடங்களை ஒரு பொலிஸ் நிலையமாக புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. பொல்பிட்டிய பொலிஸ் எல்லைக்குள் உள்ள 7 கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்த 2465 குடும்பங்களைச் சேர்ந்த 7569 பொது மக்களை பொல்பிட்டிய பொலிஸாரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிறி, ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் ...

எமது நெல்லை எமது மாகாணத்திலேயே அரிசியாக்கி விநியோகிப்பதற்குத் தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை ஆலைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் - ஆளுநர் நா.வேதநாயகன்

Image
வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல், வேறு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அரிசியாக மாற்றப்பட்டு மீண்டும் எமது மாகாணத்துக்கே விற்பனைக்கு வருகின்றது. இதனால் எமது விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.  இந்நிலையை மாற்றியமைத்து, எமது நெல்லை எமது மாகாணத்திலேயே அரிசியாக்கி விநியோகிப்பதற்குத் தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை ஆலைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலுள்ள தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள், அரச மற்றும் தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்கள் ஆகியோருடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று  (06)  நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது: எமது மாகாணத்தின் தேவைக்கு மேலதிகமாகவே நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. உபரியான நெல்லை வெளியே அனுப்புவதில் தவறில்லை. ஆனால் எமது மக்களின் தேவைக்கான நெல்லையும் வெளியே அனுப்பிவிட்டு அதையே மீண்டும் அரிசியாக அதிக விலைக்கு வாங்குவது ஆரோக்கியமானதல்ல. உள்ளூர் அரிசி ஆலை உரிமையாளர்களுக்குப...

"உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி"

Image
"உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி"  சண்டிலிப்பாய் பிரதேசத்திலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் பேரேண்ணத்தோடு சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் இன்றைய தினம் [6] விற்பனைக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள் நாடாவினை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.வடமத்திய மாகாண அமைச்சின் உத்தியோகத்தர்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு விஜயம் மேற்கொள்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சியில் பல்வேறுபட்ட உற்பத்தி பொருட்களும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Image
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க ஆதரவாக 106 வாக்குகள் அளிக்கப்பட்டன. அதேவேளை எதிராக 2 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையிலேயே 104 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டத்தை நீடிக்க அங்கீகாரமளிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

வவுனியா வடக்கு தவிசாளர் திரிபுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை கூறுகின்றார் - பிரதி அமைச்சர் உபாலி குற்றச்சாட்டு.

Image
வவுனியா வடக்கு தவிசாளர் திரிபுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை கூறுகின்றார் - பிரதி அமைச்சர் உபாலி குற்றச்சாட்டு. வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரிபுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனவே நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநருக்கு தான் கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு (வெலிஓயா) பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்கவால் கூட்டத்தில் வைத்து  பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று (05.02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மணலாறு அபிவிருத்திக்குழு கூட்டம்  காலை 9.30 மணிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அந்த நேரத்தில் அங்கு சென்றிருந்தேன். கூட்டம் ஆரம்பித்து 30 நிமிடங்கள...

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

Image
பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு! பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (05) இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு, திருச்சி – சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற யாகப் பூஜைகளில் கலந்துகொண்ட பின்னர், நயினார் நாகேந்திரன் அவர்கள் ஜீவன் தொண்டமான் எம்.பி அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்திருந்தபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள், நயினார் நாகேந்திரன் அவர்களை பொன்னாடையுடன் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தனது அழைப்பை ஏற்று, திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷே...

ஸ்மார்ட் போர்டுகளுக்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் - பிரதமர்

Image
ஸ்மார்ட் போர்டுகளுக்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துங்கள். 2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும். இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. வதந்திகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டாம். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய கல்வி மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகளைக் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதற்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "இலவசக் கல்வி என்பது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையாக இல்லாவிட...

யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற சட்டவிரோத மின்சார வேலி அமைத்த காணி உரிமையாளர் கைது.

Image
யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற சட்டவிரோத மின்சார வேலி அமைத்த  காணி உரிமையாளர் கைது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புளியங்குளம்  அலகரை, பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட யானை வேலியில் மின்சாரம் தாக்கி மோகனராசா லோயிதன் (வயது 5) எனும் சிறுவன் மரணமடைந்ததை தொடர்ந்து குறித்த காணி உரிமையாளர் இன்று (3) கைதுசெய்யப்பட்டுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புளியங்குளம்  அலகரை, பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற அமைக்கப்பட்ட யானை வேலியில் இலங்கை மின்சார சபையின் மின்னிணைப்பு ஊடாக கிடைக்கும் மின்சாரம் நேரடியாக வழங்கப்பட்டதாலேயே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,  குறித்த சட்டவிரோத  யாணை வேலி அமைத்த காணி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த  விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

Image
ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலகரை புளியங்குளம் பகுதியில் இன்று (3) மின்சாரம் தாக்கி சிறுவன் மரணமடைந்துள்ளார். மோகனராசா லோகிதன் (வயது 5) அவர்களே மின்சாரம் கழுத்தில் தாக்கியதில் மரணமடைந்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன் புல் வெட்டச் சென்றதாகவும், புல் வெட்டும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை வேலியில் இலங்கை மின்சார சபையின் மின்சாரம் பாச்சப்பட்டதாகவும் குறித்த மின்சாரக் கம்பியில் சிறுவனின் கழுத்து அகப்பட்டதால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவனின் உடலம் சட்டவைத்திய விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மாட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Image
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இன்று (3) நடத்தப்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் எட்டு நாட்களாகத் தொடர்ந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஜனாதிபதிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்காக நடத்தப்படும் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். பரீட்சையின் பின்னர், அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்குள் தகுதியுள்ள அனைவரையும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார். தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த உறுதிமொழியை அடுத்து, உணவு தவிர்ப்பு போராட்டத்தை உடனடியாகக் கைவிடுவதாக அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த ஏழு வரு...

கிளிநொச்சி நீதிமன்றில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு வழங்கப்பட்ட மரண தண்டனை!

Image
கிளிநொச்சி நீதிமன்றில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு வழங்கப்பட்ட மரண தண்டனை! கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு நேற்று(2) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு இன்றையதினம் பகல் 12 மணிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் குறித்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன்போது அதே இடத்தை சேர்ந்த அர்ச்சுனன் ரஜீபன் என்ற 19 வயதுடைய நபர் கத்தியால் வயிற்றில் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்ற...

போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்! வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு!

Image
போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்! வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு! கிபுள் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றயதினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்…. கிபுள் ஓயாத்திட்டம் தமிழ்மக்களுக்கு வேண்டாம் என்று எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்றயதினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். அந்த போராட்டத்தின் விளைவாகஎனக்கு இன்று அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  அந்வகையில் இன்றையதினம் வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேசசெயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. அதில் நான் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன்.  அந்தகூட்டத்தில் எனக்கு வழமையாக ஒதுக்கப்படும் இடத்தில் அமர்வதற்கு நான் சென்றபோது அங்கு அமர வேண்டாம் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார்.  அது தொடர்பாக நான் அவரிடம் விளக்கம் கேட்டபோது. இதுவே நடைமுறை என கூற...

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்.

Image
கிவுல் ஓயா  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம். இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் குறித்த போராட்டமானது இன்று (02) நெடுங்கேணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமாகி நெடுங்கேணி பிரதேச செயலகம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றுறுள்துடன் போராட்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய சனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கான மகஜர் நெடுங்கணி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  அழிக்காதே அழிக்காதே காடுகளை அழிகாகாதே, அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை மாற்றும் கபட நாடகத்தை நிறுத்து, வேண்டாம் வேண்டாம் கிவுல் ஓயா வேண்டாம், இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளுக்கு முற்றும்புள்ளி என்ற NPP அரசின் தேர்தல் அறிக்கைக்கு என்னாச்சு, வடகிழக்கை பிரித்தது JVP வவுனியா வடக்கை பிரிக்கிது NPP என பல வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பிய வாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,...