Posts

Showing posts from April, 2026

உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க அணி திரள்வோம். ம.ஜெகதீஸ்வரன் MP அழைப்பு.

Image
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க அணி திரள்வோம்.  ம.ஜெகதீஸ்வரன் MP அழைப்பு உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க மே தினத்தில் இன, மத, பேதங்களை கடந்து அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியாவில் நாளை (01) இடம்பெறவுள்ள மே தினக் கூட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் கடந்த கால அரசாங்கங்கள் போன்று வெட்டி பேச்சுக்களை பேசாது, செயல் வடிவம் கொடுத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. தொழிலாளர்களின் உரிமைகளை அரசாங்கம் மதித்து அதற்கான செயற்பாடுகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி வவுனியா மாவட்டத்திலும் மே தினக் சுட்டத்தினை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் மாவட்டதில் உள்ள எமது ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு வுவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாக மே தின எழுச்சி ஊர்வலம் ஆரம்பமாகி ...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 174 மில்லியன் பெறுமதியில் புணரமைக்கப்படும் நித்தகைகுளம்.

Image
முல்லைத்தீவு மாவட்டத்தில் 174 மில்லியன் பெறுமதியில் புணரமைக்கப்படும் நித்தகைகுளம். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை,  ஆண்டாங்குளம் பகுதியில் உள்ள நித்தகை குளமானது 174 மில்லியன் ரூபா பெறுமதியில் புனரமைக்கப்படுகின்றமை தொடர்பாக இன்று (30)  களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டது. குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு எதிர்வரும் மாதம் 30 ஆம் திகதிக்குள் புனரமைப்பு பணிகள் முடிவடையும் என திட்டமிட்ட வேளை தித்வா புயல் தாக்கத்தினால் தொடர்சியாக குறித்த புனரமைப்பு வேலை முன்னைடுக்க முடியாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி அரச கண்காணிப்பில் குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 9 ஆம் மாதம் முடிவடையும் என எதிர்பாக்கப்படுகிறது. குறித்த களவிஜயத்தில் நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், முல்லைத்தீவு,  நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு  உத்தியோகத்தர்கள்  மற்றும் செயற்பாட்டாளர...

முல்லைத்தீவு மாவட்ட கொக்குளாய் முகத்துவாரத்தில் இறங்குதுறை புனரமைப்பிற்காக 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

Image
முல்லைத்தீவு மாவட்ட கொக்குளாய் முகத்துவாரத்தில்  இறங்குதுறை புனரமைப்பிற்காக  2 மில்லியன் நிதி ஒதுக்கீடு. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் முகத்துவார கடற்பரப்பில் இறக்குதுறை புனரமைப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று (26) வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட குறித்த  இறங்குதுறை பகுதி புனரமைப்பிற்காக ரூபா 2 மில்லியன் ரூபா  நிதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிதி ஒதுக்கீடு மற்றும் ஆரம்ப வேலைகள் தொடர்பில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் , டித்வா புயலின் பின்னர் குறித்த பகுதியில் படகுகளை கரைக்கு ஏற்றமுடியாத சூழ்நிலை  காணப்பட்டதாகவும் குறித்த நிதியினை ஒதுக்கீடு செய்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும், குறித்த விடயத்தினை அரச கவணத்திற்கு கொண்டுசென்ற தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், குறித்த நிதியினை துரிதப்படுத்தி தந்த பிரதேச செயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு...

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் புதுக்குடியிருப்பு விவசாயிகள்.

Image
புதுக்குடியிருப்பில் அணைக்கட்டுகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு விவசாயிகளிடம் கையளிப்பு. மகிழ்ச்சியில் விவசாயிகள். உலக வங்கியில் நிதி உதவியின் கீழ் சியாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு கையளிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் மல்லிகைத்தீவு கமக்கார அமைப்பிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டு, சிவசாமி அணைக்கட்டு, சித்தாறு அணைக்கட்டு, பிள்ளையார் கோவிலடி அணைக்கட்டு, குண்டுப்பள்ளம் அணைக்கட்டு மற்றும் யங்கன் அணைக்கட்டு ஆகிய ஆறு அணைக்கட்டுகளுமே புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. அணைக்கட்டுகள் 209.78 மில்லியன் பெறுமதியில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளதுடன் விவசாயிகள் இவ் ஆண்டின் சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ளவதற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த அணைக்கட்டுகளால் சுமார் 2150 ஏக்கரில் 650 விவசாயிகள் தமது வியசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவ் விடயம் தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,  குறித்த அணைக்கட்டுகளானது ம...

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

Image
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காதலியார் சம்மளங்குள பகுதியில் காணப்படும் கற்குவாரி தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் இன்று (23) குறித்த கற்குவாரிக்கான களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி தி.பிரம்மியா தலைமையில் குறித்த களவிஜயம் நடைபெற்றதுடன், குறித்த இடத்திற்கு வருகைதந்த பொதுமக்களால் தமது வீடுகளில் வெடிப்புகள் ஏற்படுவதாகவும், கிணற்று நீர் வற்றுவதால் விவசாய நடவடிக்கை பாதிப்படைவதாகவும், கற்குவாரி கிடங்கு மூடாமையினால் தமது கால்டநடைகள் அதில் விழுந்து பரிதாபமாக இறக்கின்றது எனவும், கிணற்று கட்டுகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது என பல்வேறு விடையங்கள் எடுத்துரைக்கப்பட்டன. குறித்த கற்குவாரி 2018 ஆம் ஆண்டு அமைத்து பாறைகளை வெடிவைத்து தகர்த்து அழிவடையச்செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் குறித்த கற்குவாரி அமைக்கப்பட்டதால்  ஏற்படும் அதிர்வுகளாலும், தூசியினாலும் மூச்சுத்தினறல் நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் பாதிக்...

எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு.

Image
தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு. தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று  (22) ஆரம்பிக்கப்பட்டது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் அரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், 2027 அக்டோபர் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, குறிகாட்டுவான் இறங்குதுறையை இணைக்கும் வீதி பணிகளும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இந்ந...

நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் - யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன்.

Image
நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் - யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன். நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலன் தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக,984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று 22.04.2026 அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை தீவுகளையும் மையப்படுத்தியதாக போக்குவரத்து அபிவிருத்தி இடம்பெறும். தேசிய மக்கள் சக்தி என்ற மக்கள் அரசாங்கமானது, வடக்கு அபிவிருத்தியில் அதிக கரிசணை காட்டி வருகின்றது. கடந்த காலங்களை விடவும் வடக்கு...

அமைச்சர் விமல் ரத்னாயக்க அவர்களால் முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திற்கு நான்கு இலட்சம் நிதி ஒதுக்கீடு.

Image
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திற்கு நான்கு இலட்சம் நிதி ஒதுக்கீடு. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலையத்திற்குட்பட்ட முள்ளியவளை தமிழ் வித்தியால மைதான புனரமைப்பிற்காக  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமாகிய அமைச்சர் தோழர் விமல் ரத்னாயக்க அவர்கள் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா நான்கு இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். பாடசாலைச் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் புனரமைப்பு பணிகளுக்கான வேலைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் - யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் தெரிவிப்பு.

Image
நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் - யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் தெரிவிப்பு. நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலன் தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக,984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் இன்று 22.04.2026 அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை தீவுகளையும் மையப்படுத்தியதாக போக்குவரத்து அபிவிருத்தி இடம்பெறும். தேசிய மக்கள் சக்தி என்ற மக்கள் அரசாங்கமானது, வடக்கு அபிவிருத்தியில் அதிக கரிசணை காட்டி வருகின்றது. கடந்த காலங்களை விடவ...

உடையார்கட்டு மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்மகுமரன் பங்கேற்பு.

Image
உடையார்கட்டு மென்பந்து துடுப்பாட்ட இறுதி  போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பங்கேற்பு. முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு நண்பர்கள் விழையாட்டு மைதானத்தில் இன்று (19) நடைபெற்ற மென்பந்து துடுப்பாட்ட இறுதி போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு  வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கிவைத்தார். டினோசன் நினைவாக  40 அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்று  இறுதி போட்டியில் றெட்பானா நியூபாரதி விடையாட்டுக்கழகம் மற்றும் கிளிநொச்சி புதிய பாரதி விழையாட்டுக்கழகம் ஆகிய இரு கழகங்களுக்கிடையே குறித்த இறுதி போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர். மேலும் குறித்த மைதான அபிவிருத்திக்காக ரூபா நான்கு இலட்சம் ஆரம்பத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.