Posts

Showing posts from March, 2026

இருதரப்பின் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு எட்டப்படும். அமைச்சின் உறுதிமொழியை ஏற்று கைவிடப்பட்ட உண்ணாவிரத போராட்டம்.

Image
அமைச்சின் உறுதிமொழியை ஏற்று கைவிடப்பட்ட உண்ணாவிரத போராட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் நான்கு வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை இரண்டு நாட்களாக மேற்கொண்டுவருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (31) விஜயம் மேற்கொண்ட கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறித்த இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் அவர்களது கவலைகளையும் கோரிக்கைகளையும் நேரடியாம கேட்டறிந்ததாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த தீர்மானமும் மனிதநேயத்துடனும் நியாயத்துடனும் அணுகப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பேச்சுவார்த்தை மூலம் நிலையான தீர்வினை காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். கௌரவ அமைச்சரின் உறுதியினை ஏற்றுக்கொண்ட வணிகர்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டுள்ளதுடன், மக்கள் பிரச்சனைகளை உரையாடல் மூலம்  தீர்க்கும் பணியில் எப்போதும் உறுதியாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோத தொழிலுக்கு விரைவான நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர் உறுதி.

Image
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம்(31)  விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்  மாவட்டத்தின் கொக்குளாய், நாயாறு அளம்பில், முல்லைத்தீவு முதலான கடற்கரைகளுக்கு சென்று சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் கள ஆய்வினை மேற்கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடினார்.  அதன் பின்னர் பிற்பகல் 2 மணி அளவில் மாவட்ட மீனவர்களுக்கும் கடத்தொழில் அமைச்சருக்கும் இடையிலான  விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் மற்றும் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ உமாமகேஸ்வரன் அவர்கள் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டார்.  இதன்  போது மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி ந...

ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் முல்லைத்தீவு மாவட்ட மாநாடு.

Image
ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் முல்லைத்தீவு மாவட்ட மாநாடு. ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் ஏற்பாட்டில், திருகோணமலைப் பிரகடனத்தை வலிதாக்கும்  முல்லைத்தீவு மாவட்ட மாநாடு இன்று (28) இலங்கை செஞ்சிலுவைச்சங்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கலாநிதி இ.ஸ்ரீ ஞானேஸ்வரன் தலைமையில்  நடைபெற்ற மாநாட்டில் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் உருவாக்கம், நோக்கம் மற்றும் தேவை தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது. இக்கலந்துலையாடலில் செயற்பாட்டாளர்களான திரு.கமலேந்திரன் மற்றும் செல்வி. வனிதா சேனாதிராஜா ஆகியோரால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது. குறித்த மாநாட்டில் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு  உள்ளக முறைகளை நிராகரித்தலும் வெளியக பொறிமுறைகளை உருவாக்குவதற்குமான மூலதத்துவங்கள் என உள்ளடங்களிய 'திருகோணமலைப் பிரகடனம்'  மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரிடமும் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் செயற்பாட்டாளர்கள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் சார்பாக கலாந...

நாகரீகம் தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளர்.

Image
  நாகரீகம் தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தெல்லிப்பழை பிரதேச சபையின் தவிசாளரின் தொலைபேசி குரல்பதிவு பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் அவர்ளின் அடிப்படை நாகரீகம் தெரியாது கதைக்கப்பட்ட உரையாடலே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என தம்மை அடையாளப்படுத்துவதுடன் நாகரீகம் தெரியாது செயற்படுகின்றமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒழுக்கமின்மையை அடையாளப்படுத்துகிறது. தொலைபேசி உரையாடல் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கே.கே.எஸ் மாம்பிராய் பகுதியில் காணப்படும் ஆலயம் ஒன்றின் வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் குறித்த கோவிலுக்கு உரிமையானவர்கள் வாயில் கதவினை அமைப்பதாகவும் அது தொடர்பாக பொதுமக்களால் குறித்த தவிசாளருக்கு தெரிவிக்கும்போதே இவ்வாறு நாகரீகமற்று கதைத்துள்ளமை வெளிப்பட்டுள்ளது. பொறுப்புவாய்ந்த பதவிகளில் செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் நாகரீகமாக செயற்படவேண்டும் என்பதுடன் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உண்மைமுகத்தை அடையாளப்படுத்துவதாக வெளிப்படுகிறது.

தனியார் கல்வி நிறுவனங்களும் NPP அரசும்.

Image
தனியார் கல்வி நிறுவனங்களும் NPP அரசும். யுத்தம் உச்சம் தொட்ட காலத்தில் கூட வடமாகாண கல்வி உச்சத்தில் இருந்தது வரலாறு. கணிதம், உயிரியல் பிரிவுகள் மாத்திரமின்றி கலை வர்த்தக பிரிவுகளிலும் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடங்களை பிடித்தது மாத்திரமின்றி பல மாணவர்கள் திறமையடிப்படையில் பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகி இருந்தனர். இதுவே இனப்பிரச்சனைக்கு வித்திட்ட காரணிகளில் பிரதானமானதாகும். ஆனால் தற்போது கணித, உயிரியல் பிரிவுகளிலும் இரண்டாம் நிலைக் கல்வியிலும் அதிக 9A சித்திகளுடனும் ஓரளவேனும் ஆறுதல் தரும் பெறுபேறுகளை எடுத்து வருகின்றனர். இந்த இறுதி நாடித்துடிப்பிற்க்கேனும் உயிர்கொடுத்து வருவது தனியார் கல்வி நிலையங்களே என்றால் அது மிகையாகாது. காரணம் அதிகளவான பாடசாலைகள் தமது சாதனைகளை இணைபாடவிதான செயற்ப்பாடுகளில் செய்துவருவதால் கல்வியில் முழுமையாக அம்மாணவர்களை ஈடுபடுத்த முடியாமை யாவரும் அறிந்ததே. மற்றைய படிக்கு பாடசாலை ஆசிரியர்கள் திறமையற்றவர்கள் என்றோ அல்லது அவர்கள் பாடசாலையில் கற்பிப்பது இல்லை என்பதோ எமது வாதம் இல்லை. மேலும் பல பாடசாலை மாணவர்கள் ஓர் தனியார் கல்வி நிலையத்தில் ஓன்றுகூடும்போது அவர்க...

நயினாதிவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் - ஒருவர் வெட்டிப் படுகொலை.

Image
நயினாதிவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் - ஒருவர் வெட்டிப் படுகொலை. நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானதுடன் குறித்த சம்பவம் இன்று மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில் - நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நயினாதீவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது. இந்த சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே குறித்த பூசாரி பலியானார் என கூறப்படுகின்றது. சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொக்குவில் இந்து கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட உள்ள பல மாணவர்கள்!

Image
கொக்குவில் இந்து கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட உள்ள பல மாணவர்கள்!  யாழ்ப்பாணம் வலய கல்வி அலுவலகத்தின் தகவல் அறியும் படிவத்திற்கான பதிலின் மூலம் வினா 3.3 இல் வினாவப்பட்டதற்கு அமைய மாணவர் தெரிவுபட்டியல் வலய கல்விப் பணிமனையின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மாணவர் தெரிவினை மேற்கொண்டு தெரிவு பட்டியலை வலய கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மாணவர்கள் ஏற்கனவே வலயக்கல்விப் பணிப்பாளரின் அனுமதியின்றி உள்வாங்கப்பட்டு கற்றல் செயல்பாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் சுற்று நிருபத்தின்படி தெரிவுகள் மேற்க்கொள்ளப்படின் ஏற்கனவே தவறாக உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் நீக்கப்படும் எனும் பொருள் வெளிப்படுகிறது. அதாவது அவர்கள் பாடசாலையில் இருந்து நீக்கப்படுவார்கள்! தகுதி இருந்தும் வெளியே நிற்க்கும் மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள். இதில் தவறு யாருடையது? பாதிக்கப்படப்போகும் மற்றும் தகுதி இருந்தும் அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் இச்சிறார்களின் நி...

யாழ் தாவடியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

Image
யாழ் தாவடியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது! யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் இன்று 2026.03.02 திங்கட்கிழமை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 23 கால் போத்தல் சாராயப் போத்தல்கள் மீட்கப்பட்டன. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் மாவா, ஐஸ் போதைப் பொருள்ரால் கைது செய்யப்பட்டு இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேற்குறித்த கைது நடவடிக்கைகள் அனைத்தும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை.

Image
இலங்கை பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை. இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (2) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகைதந்து நீதிமன்ற செயற்பாடுகள், கட்டட நிலவரங்கள், ஏலத்தில் விற்பனைசெய்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என பல்வேறு விடயங்கள்  கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில் வவுனியா மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகள், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட மேலதிக நீதிபதி, சட்டத்தரனிகள், பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அலுவலக பதவிநிலை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.