2026 ஆம் ஆண்டுக்கான ஒட்டுசுட்டான் பிரதேச முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

2026 ஆம் ஆண்டுக்கான ஒட்டுசுட்டான் பிரதேச முதலாவது  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (14) ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு.இ.நிஷாந்தன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றதுடன், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  வைத்தியர் செ.திலகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம், காணி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

முக்கியமாக சம்மளங்குள கற்குவாரி பிரச்சனை , பிரஜாசக்தி, நிதி ஒதுக்கீடுகள் உட்பட பல பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது, மக்கள் சேவைகளை மேலும் விரைவாகவும் திறம்படவும் வழங்கும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு துறைசார் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட மற்றும் பிரதேச செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மக்கள் நலன் சார்ந்த சேவைகள் தடையின்றி கிடைக்கவும், பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவாக முன்னேறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.