காதலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - மக்களின் பக்கம் அரசு.

காதலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - மக்களின் பக்கம் அரசு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (14) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிஷாந்தன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr செ.திலகநாதன் தலைமையில் பல்வேறு விடையங்கள் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக  ஒட்டுசுட்டான் பிரதேச செயலக காதலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக கடந்தகாலத்தில் குறித்த கற்குவாரி இயங்கிவந்ததுடன், அதனை சுழவுள்ள பகுதிகளிலிருந்து வீடுகள் மற்றும் கிணறுகள் பாதிக்கப்பட்டதாக பொதுமக்களால் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த கற்குவாரி தொடர்பாக ஆய்வுசெய்யப்பட்டது.

குறித்த கற்குவாரி அமைப்பிற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதிலும், பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தொரிவித்துள்ளமையினால் குறித்த அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பாக கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டு ஆய்வுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.