மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.


ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலகரை புளியங்குளம் பகுதியில் இன்று (3) மின்சாரம் தாக்கி சிறுவன் மரணமடைந்துள்ளார்.

மோகனராசா லோகிதன் (வயது 5) அவர்களே மின்சாரம் கழுத்தில் தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன் புல் வெட்டச் சென்றதாகவும், புல் வெட்டும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை வேலியில் இலங்கை மின்சார சபையின் மின்சாரம் பாச்சப்பட்டதாகவும் குறித்த மின்சாரக் கம்பியில் சிறுவனின் கழுத்து அகப்பட்டதால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவனின் உடலம் சட்டவைத்திய விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மாட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.







Comments

Popular posts from this blog

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.