ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் ஒட்டுசுட்டான் கோட்டக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 2026 ஆம் ஆண்டிற்கான கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியானது இன்று (6) ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் திரு.இ.கோனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி தி.பிரம்மியா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்களின் மேலைத்தேய வாத்திய இசையுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டிகள் நடைபெற்றது.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் 355 புள்ளிகளை பெற்று மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினையும், 218 புள்ளிகளை பெற்று மு/இடதுகரை அ.த.க பாடசாலை இரண்டாம் இடத்தினையும், 140 புள்ளிகளை பெற்று மு/பண்டாரவன்னியன் மகா வித்தியாலம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் துணுக்காய் வலயக்கல்வி அலுவலக உடற்கல்வி ஆசிரிய ஆலேசகர் திரு.பா.சசிதரன், பாடசாலை அதிபர்கள், துணுக்காய் கல்வி வலைய ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



















Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.