தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, வோட்வாடி வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய வடிவேல் வினோதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் களுவன்கேணி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தின்போது தோணியிலிருந்த இளம் மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போனார். 

அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை களுவன்கேணி கடற்கரையோரத்தில் அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.