மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் விபத்து.

எகொடஉயன, மோதர சுற்றுவட்டத்திற்கு அருகில் பாணந்துறை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வலதுபுறம் திரும்பவிருந்தபோது, ​​பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். எகொட உயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.