முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் நிதி மற்றும் நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் சமுர்த்தி வங்கிகளை வலுவான, பொறுப்புணர்வு கொண்ட மற்றும் மக்கள்மைய நிதி நிறுவனங்களாக மாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல்!
முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் நிதி மற்றும் நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் சமுர்த்தி வங்கிகளை வலுவான, பொறுப்புணர்வு கொண்ட மற்றும் மக்கள்மைய நிதி நிறுவனங்களாக மாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல்!
முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் நிதி மற்றும் நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் சமுர்த்தி வங்கிகளை வலுவான, பொறுப்புணர்வு கொண்ட மற்றும் மக்கள்மைய நிதி நிறுவனங்களாக மாற்றுவது தொடர்பாக, சமுர்த்தி முகாமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (30) முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்டத்தின் அனைத்து சமுர்த்தி வங்கிகளின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துதல், சேமிப்பை ஊக்கப்படுத்துதல் கடன் வழங்கல், கடன் மீட்பு செயல்திறனை மேம்படுத்துதல், வைப்பு–கடன் விகிதத்தை உயர்த்துதல், செயலற்ற குழுக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளை (CBOs) மீளச் செயல்படுத்துதல், மற்றும் சமுர்த்தி பயனாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டை உறுதிப்படுத்துதல் ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது..
மேலும் வங்கி நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் பொறுப்புக் கூறல் முறைமைகளை வலுப்படுத்துதல், கள அடிப்படையிலான கண்காணிப்பு, செயல்திறன் மதிப்பீடு, மற்றும் தேசிய அளவிலான திட்டங்கள் மற்றும் நிதியுதவி திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் சமுர்த்தி பதில் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment