ஹபராதுவ, கொக்கல கதலுவப் பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற ஒரு குழுவைச் சேர்ந்த மூன்று பேரில் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹபராதுவ, கொக்கல கதலுவப் பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற ஒரு குழுவைச் சேர்ந்த மூன்று பேரில் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கியவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஒருவர் காணாமல் போய் உள்ளார். காணாமல் போனவர் கரடுவ, கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த சுமார் 40 பேர் கொக்கலாவின் கடலுவ பகுதிக்கு சுற்றுலாவிற்கு வந்ததாகவும், கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன நபரைத் தேடுவதற்காக உனவடுன பொலிஸ் உயிர்காப்புப் படையினர் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். அதே நேரத்தில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment