ஒட்டுசுட்டான் பிரதேசத்தை சேர்ந்த 27 பேருக்கு "பிரஜாசக்தி" வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக நியமனம் வழங்கி வைப்பு.


ஒட்டுசுட்டான் பிரதேசத்தை சேர்ந்த 27 பேருக்கு  "பிரஜாசக்தி" வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக  நியமனம் வழங்கி வைப்பு.
  
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சமூக அபிவிருத்திக்குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டோருக்கான நியமன கடிதமானது இன்று (19) ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இரட்ணகுமார் நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமாகிய வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் அவர்களினால் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமாகிய செ.திலகநாதன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ர.நிசாந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ம.புஸ்பகாந்தன், கிராம அலுவலர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டோர் என பலரும் கலந்துகொண்டனர்.









Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.