கிளிநொச்சி முரசுமோட்டையில் சற்றுமுன் கோர விபத்து. 4 பேர் சம்பவ இடத்தில் பலி ஒருவர் படுகாயம்.
கிளிநொச்சி முரசுமோட்டையில் சற்றுமுன் கோர விபத்து 4 பேர் சம்பவ இடத்திர் பலி ஒருவர் படுகாயம்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை, நான்காம் கட்டை பகுதியில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (12)மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன் புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்ஷன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.







Comments
Post a Comment