வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆதரிப்பதற்காக  நிதி  வழங்கிய முல்லை கல்வி நிலையம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னனி கல்வி நிறுவனமான முல்லைக்கல்வி நிலையம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தன்னார்வ நிதி உதவியினை வழங்கியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கல்வி நிலைய தலைமை திரு டி.தேவசாந்தன் தலைமையில் கல்விநிலைய ஆசிரியர்கள் ,  மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக வெளிப்படைத்தன்மையான நிதி சேகரிப்பு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து முறையான நிதி கையாளுகையுடன் 170,900.00  ரூபா சேகரிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நிம்பிக்கை நிதியத்தின் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிதியானது முல்லைத்தீவு மாவட்டத்தின் பாலர் கல்வி மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும் முல்லை கல்வி நிலையத்தின் முன்னுதாரனமான செயற்பாடு பலராலும் வரவேற்கப்படுகின்றது.


Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.