ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் களவிஜயம்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திற்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்கள் நேற்று (9) களவிஜயம் மேற்கொண்டார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் மாகாண விவசாயிகளை தெளிவூட்டுவதற்காக தயாராகிவரும் வயல் துண்டங்களை, மாகாணபணிப்பாளர் மற்றும் குழுவினர் பார்வையிட்டனர்.
மேலும், மாகாண விவசாயப் பணிப்பாளருக்கும் விவசாய கண்காட்சி பங்குதாரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர், மாகாண திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்




Comments
Post a Comment