ஸ்மார்ட் கிராம அலுவலர் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான இரண்டாம் கட்ட கள ஆய்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில்.

கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகங்களினை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றும் நோக்குடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள "ஸ்மார்ட் கிராம அலுவலர் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான இரண்டாம் கட்ட கள ஆய்வு.

கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகங்களினை பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றும் நோக்குடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள ஸ்மார்ட் கிராம அலுவலர் திட்டத்தை  செயற்படுத்துவது தொடர்பான இரண்டாம் கட்ட கள ஆய்வு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு. அ .உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08) ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் ஒரு தொகுதி கிராம அலுவலர் பிரிகளில் இடம்பெற்றது.

இக் கள ஆய்வின் போது கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகங்களினை வினைத்திறனான பொதுமக்கள் நேய நிலையங்களாக மாற்றுவதற்கு அவசியமான முறைமையை உருவாக்குதல் மற்றும் பௌதீக வளங்களின் தேவைப்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்ப்பட்டது. 

இக் கவிஜயத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலளார் திரு. நிசாந்தன் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் மாவட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.