இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலிசாங்.

 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு,  இம்மாதம் 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.

திருமதி ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

அத்துடன், 'டித்வா'  சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான  பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்ததுடன், 

2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற திருமதி ஜூலி சாங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.