போக்குவரத்து பொலிசார் இருந்தும் பயன் இல்லை என மக்கள் ஆதங்கம்.

மஸ்கெலியா பொலிஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து பொலிசார்  இருந்தும் கடந்த பல மாதங்களாக நகர் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபடுவது இல்லை என்று நகர் வாழ் மக்களுக்கும் வாகன சாரதிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

நகரில் உள்ள சகல வீதிகளிலும் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் நுகர்வோர் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.

அடிக்கடி வீதி தடை ஏற்படும் அபாயமும் உள்ளது இதனைத் தவிர்க்க மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து பொலிசார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து பொலிசார் என்று பெயர் அளவில் இருப்பது பயன் இல்லை என மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.