இயந்திர நாற்றுநடுகை செய்யப்பட்ட நெற்ச்செய்கைக்கான வயல் விழா.
வவுனியா வீரபுரம் விவசாயப் போதனாசிரயர் பிரிவில் PSDG 2025 திட்டத்தின் கீழ் இயந்திர நாற்றுநடுகை செய்யப்பட்ட நெற்ச்செய்கைக்கான வயல் விழா நிகழ்வானது நேற்றைய தினம் (16) காலை 10.00 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் செல்வி பி.சரண்ஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண மேலதிக விவசாயப் பணிப்பாளர் திரு தெ.யோகேஸ்வரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி ஜுடித் மாலினி முரளீதரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Comments
Post a Comment