அனர்த்தத்திற்கான எதிர்வுகூறலினை தொடர்ந்து முன்னாயத்த நிலமைகளை மேற்கொள்ளவதற்கான இரணைமடு குளதிற்கான களவிஜயம்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின்  நிலமைகளை  மாவட்ட அரசாங்க அதிபர், புதிதாக பதவியேற்ற 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

அனர்த்தத்திற்கான எதிர்வுகூறலினை தொடர்ந்து முன்னாயத்த நிலமைகளை மேற்கொள்ளவதற்கான களவிஜயத்தின் ஒரு பகுதியாக இரணைமடு குளத்தின் வால் கட்டுப்பகுதியினையும் குளத்தின் பிரதான கட்டு அமைப்பினையும் மேலதிக  நீர் வெளியேற்றும் கதவு அமைப்புக்களையும் பார்வையிட்டதோடு நீர்ப்பாசன பொறியியலாளருடன் கலந்துரையாடலினையும் மேற்கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி Major General HMGE Herath RSP USP ndu psc (General Officer Commanding 55 Infantry Division) அவர்கள் மற்றும் Brigadier TBMR Kandekumbura (RSP USP Commander 551 Infantry Brigade) மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K அழகக்கோன்,55 வது காலாட்படை படைப்பிரிவு மற்றும் 551 காலாட்படைபிரிவின் இராணுவத்தினர் ஆகியோர் இந்த களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.






Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.