கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஒதுக்கீட்டினை வினைத்திறனாக பயன்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவினை தயாரித்தல் திட்ட முன்மொழிவு தயாரித்தலின் போது அவதானம் செலுத்தவேண்டிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக 2018ம் ஆண்டு காலப்பகுதியில் வன்னேரிக்குளம் அமைந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்ட சுற்றுலாத்தளத்தினை சீரமைத்து அதனை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றதோடு திட்ட முன்மொழிவினை தயாரித்தல் தொடர்பில் உள்ளடக்கப்பட வேண்டிய காரணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து இரணைமடு குளம் மற்றும் கிளிநொச்சிக் குளத்தினை சூழவுள்ள பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் ஜெகநாதன் விவேகானந்தன் ,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன்,மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் கே.கருணாநிதி, நீர்ப்பாசன பொறியியலாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், துறை சார்ந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment