வடக்கு மாகாண கல்வித் துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் கல்வித் துறைசார் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நேற்றயதினம் (8) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் 1ம் மற்றும் 6ம் தரங்களிற்கான புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் ஊடாக உரிய ஆரம்ப  கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலை அதிபர்களை தயார்ப்படுத்தல், புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விரிவான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல், வடக்கு மாகாணத்தின் கல்வி மட்டத்தை  உயர் நிலைக்கு கொண்டு வருவதற்காக செயற்படுத்தப்படவேண்டிய திட்டங்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான விடயங்கள் ஆகியன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.