மாபெரும் பட்டத்திருவிழா முல்லைத்தீவில்.

வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும் வட்டுவாகல் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா முல்லைத்தீவில் சிறப்பாக நடைபெற்றது.

வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும் வட்டுவாகல் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா இன்றைய தினம் (25) பி.ப 2.00 மணிக்கு முல்லைத்தீவு சுற்றுலாமைய நகரக் கடற்கரையில்  சிறப்பாக  நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவர்களோடு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறுவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை ஏற்படுத்திடும் நோக்கிலும் சமூக மயமாக்கலை ஒருங்கிணைக்கும் நோக்கிலும் இந்தப் பட்டத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் 500 மேற்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட்டன. விசேடமாக சிறார்களை ஊக்குவிக்கும் நோக்கில் பட்டங்களும் வழங்கிவைக்கப்பட்டன.









Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.