யாழ் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.
யாழ் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.
தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் 2026.01.16 ஆம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட பிரதி ஆணையாளர் திரு அருணாச்சலம் கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப் பொங்கல் விழாவில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர்நாயகம் திரு. கமல் அமரசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் என்பதுடன், வடக்கு மாகாண சபை மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திருமதி காஞ்சனா குணசீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முதன்முறையாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஆணையாளர் நாயகத்தின் பங்கு பற்றுதலுடன் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப் பொங்கல் விழாவில் திணைக்களத்தின் ஆணையாளர்கள், பிரதம கணக்காளர், பதவிநிலை உயர் அதிகாரிகள் மற்றும் யாழ் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்.



Comments
Post a Comment