கல்லடி பாலத்தில் இருந்து குதித்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு!
கல்லடி பாலத்தில் இருந்து குதித்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு!
நேற்று (23) இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய கல்லடி பாலத்தில் இருந்து, குதித்த யுவதி, பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதையுடையவர் எனவும், கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment