இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியினை சந்தித்தார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்.

தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ் ஆண்டிற்கான அயலக தமிழர் தின நிகழ்விற்கு இலங்கையிலிருந்து  சிறப்பு விருந்தினராக சென்னைக்கு உத்தியோக பூர்வ  விஜயத்தினை  மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இன்றைய தினம் (12) தமிழ்நாட்டின்  நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களுடன்  விஷேட  சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது   இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களுக்கான உதவிகள் ஒத்துழைப்புகள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன்,

இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சனை அதற்கான தீர்வுகள் குறித்தும், இது சம்பந்தமாக உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றிணை மிக விரைவாக இரு நாடுகளுக்கிட்டையில் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் எடுத்துக் கூறியிருந்தார்.

இதன் போது தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், பிரதி அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் வாழும் அகதிகளின்  எதிர்காலம் குறித்து பல்வேறு யோசனைகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக அவர்களுக்கான அடிப்படை பிரச்சனைகள், அவர்களின் எதிர்காலம்  தொடர்பாக கருத்துகளையும் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.