வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. புத்திக்க சிறிவர்த்தன அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. புத்திக்க சிறிவர்த்தன அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (12)அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இச் சந்திப்பில்  யாழ்ப்பாண  மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  திரு. ஜே. ஏ. சந்திரசேன அவர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. ஜீ. பி. ஜெயமஹ, யாழ்ப்பாண பொலீஸ் தலைமைப்பீட அதிகாரி திரு. பாலித செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். 

அரசாங்க அதிபர் அவர்களுடனான சந்திப்பிற்குப் பின்னர் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 




Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.