க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களிற்கான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களிற்கான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் பரீட்சை முடியும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் அனைத்து வகையான விளம்பர நடவடிக்கைகளும் இதில் உள்ளடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார்.

Comments
Post a Comment