காலி - மில்டன் குணவர்தன மாவத்தையில் கார் வீட்டு சுவரில் மோதியதில் சாரதி உயிரிழப்பு.

காலி - மில்டன் குணவர்தன மாவத்தையில் கார் வீட்டு சுவரில் மோதியதில் சாரதி உயிரிழப்பு.

இந்த சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது. தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று நகரத் தொடங்கியுள்ளது. ஓட்டுநர் காரை கட்டுப்படுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஓட்டுநர், கராப்பிட்டிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 73 வயதுடைய முதியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.