கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்.


கிவுல் ஓயா  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் குறித்த போராட்டமானது இன்று (02) நெடுங்கேணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமாகி நெடுங்கேணி பிரதேச செயலகம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றுறுள்துடன் போராட்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய சனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கான மகஜர் நெடுங்கணி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  அழிக்காதே அழிக்காதே காடுகளை அழிகாகாதே, அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை மாற்றும் கபட நாடகத்தை நிறுத்து, வேண்டாம் வேண்டாம் கிவுல் ஓயா வேண்டாம், இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளுக்கு முற்றும்புள்ளி என்ற NPP அரசின் தேர்தல் அறிக்கைக்கு என்னாச்சு, வடகிழக்கை பிரித்தது JVP வவுனியா வடக்கை பிரிக்கிது NPP என பல வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பிய வாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  பிரதேச சபை தவிசாளர்கள், கட்சி பிரமுகர்கள், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.