உறுதிப்படுத்திய முத்திரைகள் இல்லாது காணப்படும் வவுனியா மாநகரசபை பற்றுச்சீட்டுகள்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடத்தில் வவுனியா மாநகரசபை பெயர் பொறிக்கப்பட்ட ரூபா 50 பெறுமதியான பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றபோதிலும் அவற்றில் மானகரசபையின் சின்னம் அல்லது உத்தீயோகபூர்வ முத்திரை காணப்படாமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
வவுனியா மாநகர சபைக்கு சொந்தமான குறித்த மலசலகூடத்தை குத்தகை அடிப்படையில் ஒருவர் நடாத்திவருவதுடன் குறித்த மலசலகூடத்திற்கு ரூபா 50 கட்டனம் அறவிடுவதுடன் மாநகரசபையின் உத்தியோக பூர்வ முத்திரை பதிக்கப்படாது பற்றுச்சீட்வுகள் வழங்கப்பட்டு பணம் அறவிருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மலசலகூடம் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவதுடன் மாநகரசபையின் முத்திரையற்ற கட்டன பற்றுச்சீட்டு வழங்குபவரை வினவியபோது தம்மால் வவுனியா மாநகர சபைக்கு பற்றுச்சீட்டுகளை வழங்கி அவற்றிற்கு முத்திரை பதிக்குமாறு அனுப்பிவைத்ததாகவும் இதுவரை முத்திரை பதிக்கப்பட்ட பற்றுச்சீட்டு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மாநகரசபை உரிய தீர்வினை வழங்குவது கட்டாயமான ஒன்றாகும்.






Comments
Post a Comment