ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான கினிகத்தேன பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான கினிகத்தேன பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் சமய தலைவர்களின் அனுஸ்டானங்களை தொடர்ந்து இன்று (06) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த இடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் போர்டுலேண்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்ததாரரான சீன நிறுவனத்தின் பொறியாளர்களால் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட பொல்பிட்டிய சந்தியில் உள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் நிலங்களை பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு, கட்டிடங்களை ஒரு பொலிஸ் நிலையமாக புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
பொல்பிட்டிய பொலிஸ் எல்லைக்குள் உள்ள 7 கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்த 2465 குடும்பங்களைச் சேர்ந்த 7569 பொது மக்களை பொல்பிட்டிய பொலிஸாரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிறி, ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவின் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.



Comments
Post a Comment