யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற சட்டவிரோத மின்சார வேலி அமைத்த காணி உரிமையாளர் கைது.

யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற சட்டவிரோத மின்சார வேலி அமைத்த  காணி உரிமையாளர் கைது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புளியங்குளம்  அலகரை, பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட யானை வேலியில் மின்சாரம் தாக்கி மோகனராசா லோயிதன் (வயது 5) எனும் சிறுவன் மரணமடைந்ததை தொடர்ந்து குறித்த காணி உரிமையாளர் இன்று (3) கைதுசெய்யப்பட்டுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புளியங்குளம்  அலகரை, பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற அமைக்கப்பட்ட யானை வேலியில் இலங்கை மின்சார சபையின் மின்னிணைப்பு ஊடாக கிடைக்கும் மின்சாரம் நேரடியாக வழங்கப்பட்டதாலேயே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 

குறித்த சட்டவிரோத  யாணை வேலி அமைத்த காணி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த  விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.