இருதரப்பின் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு எட்டப்படும். அமைச்சின் உறுதிமொழியை ஏற்று கைவிடப்பட்ட உண்ணாவிரத போராட்டம்.

அமைச்சின் உறுதிமொழியை ஏற்று கைவிடப்பட்ட உண்ணாவிரத போராட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் நான்கு வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை இரண்டு நாட்களாக மேற்கொண்டுவருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (31) விஜயம் மேற்கொண்ட கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறித்த இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் அவர்களது கவலைகளையும் கோரிக்கைகளையும் நேரடியாம கேட்டறிந்ததாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த தீர்மானமும் மனிதநேயத்துடனும் நியாயத்துடனும் அணுகப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பேச்சுவார்த்தை மூலம் நிலையான தீர்வினை காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கௌரவ அமைச்சரின் உறுதியினை ஏற்றுக்கொண்ட வணிகர்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டுள்ளதுடன், மக்கள் பிரச்சனைகளை உரையாடல் மூலம்  தீர்க்கும் பணியில் எப்போதும் உறுதியாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.









Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.