யாழ் தாவடியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

யாழ் தாவடியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் இன்று 2026.03.02 திங்கட்கிழமை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 23 கால் போத்தல் சாராயப் போத்தல்கள் மீட்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் மாவா, ஐஸ் போதைப் பொருள்ரால் கைது செய்யப்பட்டு இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேற்குறித்த கைது நடவடிக்கைகள் அனைத்தும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்றது.


Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.