தனியார் கல்வி நிறுவனங்களும் NPP அரசும்.

தனியார் கல்வி நிறுவனங்களும் NPP அரசும்.

யுத்தம் உச்சம் தொட்ட காலத்தில் கூட வடமாகாண கல்வி உச்சத்தில் இருந்தது வரலாறு. கணிதம், உயிரியல் பிரிவுகள் மாத்திரமின்றி கலை வர்த்தக பிரிவுகளிலும் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடங்களை பிடித்தது மாத்திரமின்றி பல மாணவர்கள் திறமையடிப்படையில் பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகி இருந்தனர். இதுவே இனப்பிரச்சனைக்கு வித்திட்ட காரணிகளில் பிரதானமானதாகும்.

ஆனால் தற்போது கணித, உயிரியல் பிரிவுகளிலும் இரண்டாம் நிலைக் கல்வியிலும் அதிக 9A சித்திகளுடனும் ஓரளவேனும் ஆறுதல் தரும் பெறுபேறுகளை எடுத்து வருகின்றனர். இந்த இறுதி நாடித்துடிப்பிற்க்கேனும் உயிர்கொடுத்து வருவது தனியார் கல்வி நிலையங்களே என்றால் அது மிகையாகாது. காரணம் அதிகளவான பாடசாலைகள் தமது சாதனைகளை இணைபாடவிதான செயற்ப்பாடுகளில் செய்துவருவதால் கல்வியில் முழுமையாக அம்மாணவர்களை ஈடுபடுத்த முடியாமை யாவரும் அறிந்ததே. மற்றைய படிக்கு பாடசாலை ஆசிரியர்கள் திறமையற்றவர்கள் என்றோ அல்லது அவர்கள் பாடசாலையில் கற்பிப்பது இல்லை என்பதோ எமது வாதம் இல்லை. மேலும் பல பாடசாலை மாணவர்கள் ஓர் தனியார் கல்வி நிலையத்தில் ஓன்றுகூடும்போது அவர்களின் போட்டித்தன்மை மிடுக்கி விடப்படுகிறது.

இவ்வாறான நிலையில்  ஏற்க்கனவே ஞாயிறு காலையும், வெள்ளி மாலையும் தனியார் வகுப்புக்கள் வைக்கக்கூடாது என வடக்கு மாகாண முன்னாள் ஆளுனர் சார்ள்ஸ் அம்மையாரும் முன்னாள் அரச அதிபர் அம்பலவானரும் கொண்டுவந்த நடைமுறை இன்னும் வலுவில் உள்ள நிலையில் அரசு விசேட விடுமுறையாக அறிவித்துள்ள புதன் வாரத்தில் மாலைவேளை நடக்கும் வகுப்புக்களுக்கு கூட தடைபோடும் செயற்ப்பாட்டை சில பிரதேசசபை அரசியல் கட்ச்சி உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த புதன் வாரமளவில் மல்லாகம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எந்த அறிவுறுத்தல்களோ எழுத்தாவனங்களோ இன்றி காடையர் குழுக்கள் போல் சென்ற இந்த பிரதேசசபை உறுப்பினர்கள் வகுப்புக்கள் வைக்க கூடாது என கடுந்தொனியில் ஆசிரியர்களை எச்சரித்துள்ளனர். புதன் வாரம் மாலை வேளையில் இடம்பெறும் இந்த வகுப்புக்களையும் இவர்கள் தடைசெய்வதால் ஞாயிறு காலை, புதன், வெள்ளி மாலை என 3 பொழுதுகள் மாணவர்களின் வகுப்புக்கள் குழப்பமடையும். இதற்க்கு மேலதிகமாக தம்மை அண்மித்த பாடசாலைகளின் நிகழ்வுகளுக்கும் பல தனியார் கல்வி நிலையங்கள் விடுமுறை வழங்குவது வழமை. இந்த நிலமை நிச்சயம் மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கு வழிவகுக்க கூடிய ஒரு விடயமே.

இதில் எதிர் விவாதம் புரிய எத்தனிப்பவர்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு வகுப்புக்களை தடை செய்வதால் தனியார் கல்வி நிலையங்கள்

கட்டணக் குறைப்பு களை செய்யப்போவது இல்லை.

மாணவர்களின் மேலதிக விளக்கங்கள், பரீட்சை களை தவிர்த்து பாடப்பரப்பை இலகுவாக உரிய நேரத்தில் பூர்த்திசெய்ய முடியும். (அதில் அவர்கள் நிபுனத்துவமடைந்தவர்கள்)

நிர்வாக செலவுகள், மின்சார செலவுகள், ஆசிரியர் கொடுப்பனவுகள், பெறுமான தேய்வுகள் மீதமாகும்.

எனவே இதனால் முறீறுமுழுதாக பாதிக்கப்படப்போவது மாணவர்களே!

இதற்க்கு மேலும் அதிமேதகு ஜனாதிபதியின் எரிபொருள் சேமிக்கும் திட்டம் என நீங்கள் வாதிட்டால்,

1. தனியார் கல்வி நிலையங்களில் அருகில் உள்ள மாணவர்களே கற்க்கிறார்கள். (தொலைவில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் எனின் அருகில் உள்ள கல்வி நிலையத்திற்க்கு/இணையவழி கற்றலுக்கு மாறுங்கள்.)

2. யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இல்லாமல், பெற்றோல் என்றால் என்ன என்றே தெரியாத, இடப்பெயர்வு காலப்பகுதியில் கூட துவிச்சக்கர வண்டியில் சாவகச்சேரி சென்று மாமர நிழலில் குமரன் சேரிடம்(Physics) கற்றவர்கள் எம்மில் பலர் உண்டு.

3. கல்வி நிலையம் தவிர வேறு தனியார் நிலையங்களுக்கு செல்பவர்தளால், வீனாக தெருக்களில் சுற்றுபவர்களால், பண்ணை கடற்கரையில் TikTok செய்யும் இளைஞர்களால் எரிபொருள் இழப்பு வராதா?

எனவே புதன் பாடசாலை நேரம் தவிர்ந்த மாலைநேர வகுப்புக்களை குழப்பும் அரசியல் விளம்பர செயற்ப்பாடுகளை தவிர்த்து ஆக்கபூர்வமான செயற்ப்பாடுகளில் பிரதேசசபை அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவது மாணவர்களுக்கு சிறந்த கல்வியை தொடர உதவும்.

மாறாக விடுமுறை விட்டால் மாணவர்களை விடுமுறை தின கொண்டாட்டங்களுக்கு பெற்றோர்கள் அழைத்துசென்று அதிக எரிபொருளை சினிமா அரங்குகள், கடற்கரைகள், பூங்கனிச்சோலைகள், விளையாட்டுத்திடல்கள் என பல வழிகளில் முடிப்பார்கள். 

இன்னும் புரியலை என்றால் பாவம் யாழ்ப்பாணம் வந்த Nolimit, Nadhyas, Dominos, Selam Biryani, Pizza Hut, KFC, GA மகனின் உணவு விடுதி ... அங்கயும் சனம் போகனும் என்டா தனியார் கல்வி நிலையம் மூடனும் தானே. கல்வியோட எங்கட சனம் நின்டா உது நடக்குமா? கையூட்டு வருமா??

அப்ப ஒருநாள் லீவு விடனும் தானே. இல்லாட்டி இப்ப இளைய சமூகம் எங்களை விடப்படிச்சு எங்களையே கேள்வி கேக்குது. நாங்கள் எப்படி உறுட்டுறது!!!

மாணவர்களின் கல்விக்கு தனியார் நிலையங்களின் பங்களிப்பு மெச்சப்பெரியது, அதனை நசுக்காதீர்கள்.

பிரதிசெய்யப்பட்டது.


Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.