முல்லைத்தீவு மாவட்டத்தில் 174 மில்லியன் பெறுமதியில் புணரமைக்கப்படும் நித்தகைகுளம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 174 மில்லியன் பெறுமதியில் புணரமைக்கப்படும் நித்தகைகுளம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை, ஆண்டாங்குளம் பகுதியில் உள்ள நித்தகை குளமானது 174 மில்லியன் ரூபா பெறுமதியில் புனரமைக்கப்படுகின்றமை தொடர்பாக இன்று (30) களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டது.
குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு எதிர்வரும் மாதம் 30 ஆம் திகதிக்குள் புனரமைப்பு பணிகள் முடிவடையும் என திட்டமிட்ட வேளை தித்வா புயல் தாக்கத்தினால் தொடர்சியாக குறித்த புனரமைப்பு வேலை முன்னைடுக்க முடியாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி அரச கண்காணிப்பில் குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 9 ஆம் மாதம் முடிவடையும் என எதிர்பாக்கப்படுகிறது.
குறித்த களவிஜயத்தில் நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், முல்லைத்தீவு, நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு உத்தியோகத்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








Comments
Post a Comment