முல்லைத்தீவு மாவட்ட கொக்குளாய் முகத்துவாரத்தில் இறங்குதுறை புனரமைப்பிற்காக 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

முல்லைத்தீவு மாவட்ட கொக்குளாய் முகத்துவாரத்தில்  இறங்குதுறை புனரமைப்பிற்காக  2 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் முகத்துவார கடற்பரப்பில் இறக்குதுறை புனரமைப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று (26) வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட குறித்த  இறங்குதுறை பகுதி புனரமைப்பிற்காக ரூபா 2 மில்லியன் ரூபா  நிதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிதி ஒதுக்கீடு மற்றும் ஆரம்ப வேலைகள் தொடர்பில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் ,

டித்வா புயலின் பின்னர் குறித்த பகுதியில் படகுகளை கரைக்கு ஏற்றமுடியாத சூழ்நிலை  காணப்பட்டதாகவும் குறித்த நிதியினை ஒதுக்கீடு செய்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும், குறித்த விடயத்தினை அரச கவணத்திற்கு கொண்டுசென்ற தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், குறித்த நிதியினை துரிதப்படுத்தி தந்த பிரதேச செயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.








Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.