உண்ணாவிரத போராட்டத்திற்கு நடுநிலையான கலந்துரையாடல் ஊடாக நிரந்தர தீர்வு.
உண்ணாவிரத போராட்டத்திற்கு நடுநிலையான கலந்துரையாடல் ஊடாக நிரந்தர தீர்வு.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் நான்கு வர்த்தகர்கள் மேற்கொண்ட உண்டாவிரத போராட்டத்திற்கு இறுதி முடிவு இன்று (2) எட்டப்பட்டது.
கடந்த முன்று நாட்களாக நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு நேற்று முன்தினம் தேசிய மக்கள் சக்தி அரசின் கௌரவ கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வருகைதந்து நிலமைகளை ஆராய்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வினை வழங்குவதாக மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழியில் அடிப்படையில், விரைவான நடவடிக்கை ஊடாக இன்று (2) சம்மந்தப்பட்ட இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய உபாலி சமரசிங்க அவர்களின் பங்கேற்புடன் இன்று (2) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் குறித்த பிணக்குடன் தொடர்புடய இருதரப்பினரிடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நடுநிலையான கலந்துரையாடலில் இருதரப்புக்கும் பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் குறித்த பிணக்கு தீர்க்கப்பட்டுள்ளதுடன், இருதரப்பினரும் நடுநிலையான இறுதி முடிவுக்கு உடன்பட்டு குறித்த பிணக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துலையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) , தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர், ஆலய நிர்வாகத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கள் நடுநிலையாக செயற்படுகின்றமை மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.








Comments
Post a Comment