வயல் நிலங்களை மட்டப்படுத்தும் செயற்பாடு புதுக்குடியிருப்பில்.

வயல் நிலங்களை மட்டப்படுத்தும் செயற்பாடு புதுக்குடியிருப்பில். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் வயல் நிலங்களை மட்டப்படுத்தும் செயற்பாடானது கடந்த 09.04.2026 அன்று கைவேலி பிரதேசத்தில் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.N.சுஜீவரூபன் தலைமையில் நடைபெற்றுள்ளதுடன், உற்பத்தி திறனைஅதிகரிக்கும் செயற்திட்டத்தின் கீழ் 274 ஏக்கர் வயல் நிலங்கள் மட்டப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவை நிலைய பிரதி ஆணையாளர் திரு.கனியூட், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரணவா சிறிதரன், முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பாடவிதான உத்தியோகத்தர் ப.கேமா, மத்துவில் விவசாய போதனாசிரியர்பு.பிரசாந்தன், விவசாயதிணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.