சிறுபோக உர விநியோகம் புதுக்குடியிருப்பில்.
சிறுபோக உர விநியோகம் புதுக்குடியிருப்பில்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச கமநல சேவை நிலையத்தில் சிறுபோக உர விநியோகம் இன்று (16) முதல் கட்டமாக வழங்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்குரிய சிறுபோக இலக்காக 2000 ஏக்கர் நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் இம்முறை சிறுபோகமானது 1750 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
குறித்த பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தடையின்றி விவசாயம் மேற்கொள்வதற்காக அரச மற்றும் தனியார் கம்பனிகளிடமிருந்து 1787 பை உரம் ஒதுக்கீடாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், 1 ஏக்கருக்கு 50KG அடிப்படையில் இன்று விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட பெரிய நீர்பாசனம், சிறிய நீர்பாசனம் மற்றும் அணைக்கட்டுகளில் பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுபோக உர விநியோகம் தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், குறித்த உர விநியோகம் கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியழிப்பதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நன்றிதெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.


Comments
Post a Comment