குருந்தூர் மலை பகுதிக்குட்பட்ட குருந்துக்குளம் பிரதான வாய்க்காலுக்கு தீர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி.

குருந்தூர் மலை பகுதிக்குட்பட்ட குருந்துக்குளம் பிரதான வாய்க்காலுக்கு தீர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருந்நூர் மலைக்கு அண்மைய பகுதியில் காணப்பட்ட குருத்துக்குளம் பிரதான கால்வாய் இன்று விவசாயிகளின் பாவனைக்கு விடுவிப்பு செய்வதற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் குருந்தூர் மலைக்கு அண்மிய பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்கு பல்வேறு விதங்களில் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (17) தீர்வு எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தி அரசின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகைதந்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டி.துசிதமென்டிஸ் அவர்களால் குறித்த தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன்,  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குருந்துக்குளம் பிரதான கால்வாயிலிருந்து பகுதியில் சுமார் 250 ஏக்கர் விவசாய காணிகளுக்கு நீர்பாச்ச முடியும் என்பதுடன், சுமார் 450 விவசாயிகள் பயன்பெறவுள்ளனர்.

குறித்த களவிஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ஜெகதீஸ்வரன், கரைதுறைபற்ரு பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள வலய பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தி மாவட்ட பிரதிநிதிகள், கிராம அலுவலர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.