கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் தொடர்ச்சியாக களவாடப்படும் மாடுகள்.
கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் தொடர்ச்சியாக களவாடப்படும் மாடுகள்.
கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறிப்பிட்ட சில நாட்களுக்குள் பதினைந்து மாடுகளுக்கும் அதிகமாக திருட்டு போயுள்ளதாகவும் இது இவ்வாறு தொடருமாயின் மக்களின் வாழ்வாதாரம் மிகப் பாரிய நெருக்கடி நிலைக்கு உள்ளாகும் எனவும் கூறப்படுகிறது.
அன்றாட வாழ்வாதாரத்தை நகர்த்துவதற்கே அல்லல்படும் மக்களின் மாடுகளே இவ்வாறு திருடப்படுவதால், அவர்கள் மிகுந்த வறுமைக்கும் மன உழைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.
மேலும் மாடுகள் களவுபோகின்றமை தொடர்பாக உரிமையாளர்களினால் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாட்டு உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், களவாடப்படும் மாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறை கொள்ளுமாறும், விரைவில் இதற்கான தீர்வு காணப்படுமாயின் தங்களது மாடுகளை திரும்ப பெறுவதற்கான வழி கிட்டும் எனவும், மாடுகள் வாழ்வாதாரம் எனவும் அதனை தொடர்சியாக இழப்பதால் தமது வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும், இதனுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்தனர்.


Comments
Post a Comment