வேணாவில் கலைமகள் கலாமன்றத்தின் முழு நிலாக் கலை நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பங்கேற்பு.

வேணாவில் கலைமகள் கலாமன்றத்தின் முழு நிலாக் கலை நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பங்கேற்பு.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும், கலாமன்றங்கள் சார்பாக வேணாவில் கலைமகள் கலாமன்றமும் இணைந்து நடாத்திய முழு நிலைக் கலை நிகழ்வும் அதன் 13 ஆம் ஆண்டின் ஆண்டு விழா இன்று (19) புதுக்குடியிருப்பு வேணாவில் கலைமகள் கலாமன்றத்தில் நடைபெற்றது.

புதுவைக் கலைச்சுடர் சு.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பிரதம விருத்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில்  புதுக்குடியிருப்பு பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி ம.டென்சிகா, புதுக்குடியிருப்பு  பிரதே சபை உறுப்பினர்கள், மதகுருக்கள்,  ஓய்வுநிலை  பிரதி மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஓய்வுநிலை அதிபர்கள், ஆலய மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.