ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் புதுக்குடியிருப்பு விவசாயிகள்.

புதுக்குடியிருப்பில் அணைக்கட்டுகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு விவசாயிகளிடம் கையளிப்பு. மகிழ்ச்சியில் விவசாயிகள்.

உலக வங்கியில் நிதி உதவியின் கீழ் சியாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு கையளிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் மல்லிகைத்தீவு கமக்கார அமைப்பிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டு, சிவசாமி அணைக்கட்டு, சித்தாறு அணைக்கட்டு, பிள்ளையார் கோவிலடி அணைக்கட்டு, குண்டுப்பள்ளம் அணைக்கட்டு மற்றும் யங்கன் அணைக்கட்டு ஆகிய ஆறு அணைக்கட்டுகளுமே புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

அணைக்கட்டுகள் 209.78 மில்லியன் பெறுமதியில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளதுடன் விவசாயிகள் இவ் ஆண்டின் சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ளவதற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த அணைக்கட்டுகளால் சுமார் 2150 ஏக்கரில் 650 விவசாயிகள் தமது வியசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், 

குறித்த அணைக்கட்டுகளானது மிகவும் சிரமத்தின் மத்தியிலும், போர் காரணமாக தடைப்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு மத்தியிலும் இதனை முழுமைப்படுத்தி கையளித்த  உலக வங்கி, சியாப் நிறுவனம், விவசாய திணைக்களம், இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இலங்கையில் விவசாயிகளின் நலன்கருதி விவசாயத்தை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதாகவும் அதனால் ஜனாதிபதிக்கு விவசாயிகள் சார்பாக நன்றிதெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.










Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.