உடையார்கட்டு மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்மகுமரன் பங்கேற்பு.

உடையார்கட்டு மென்பந்து துடுப்பாட்ட இறுதி  போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பங்கேற்பு.

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு நண்பர்கள் விழையாட்டு மைதானத்தில் இன்று (19) நடைபெற்ற மென்பந்து துடுப்பாட்ட இறுதி போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு  வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கிவைத்தார்.

டினோசன் நினைவாக  40 அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்று  இறுதி போட்டியில் றெட்பானா நியூபாரதி விடையாட்டுக்கழகம் மற்றும் கிளிநொச்சி புதிய பாரதி விழையாட்டுக்கழகம் ஆகிய இரு கழகங்களுக்கிடையே குறித்த இறுதி போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் குறித்த மைதான அபிவிருத்திக்காக ரூபா நான்கு இலட்சம் ஆரம்பத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.