வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரரா ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட ஜெகதீஸ்வரன் MP.
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட ஜெகதீஸ்வரன் MP.
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸவரன் இன்று (17) வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விஷேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஆலய நிர்வாகம் மற்றும் ஆலய அறநெறி பாடசாலை நிர்வாகத்தினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரிடம் Solar light, மற்றும் தறப்பாள் என்பன வழங்கப்பட்டதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஞா.அகிலன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் கணபதி, Clean Srilanka இணைப்பாளர், ஆலய மற்றும் அறநெறி பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.



Comments
Post a Comment